
அமைப்பின் கொள்கைகள்

ஹிந்து ஜனசேனா என்பது இந்து மதத்தை சார்ந்த ஒரு சமூக சேவை அமைப்பாகும்.
இந்த அமைப்பு மகாகவி பாரதியார் அவர்களின் பாரதமாதா கொள்கையை பின்பற்றியும், லோகமன்யா பால கங்காதர திலக் அவர்களின் ஹிந்து ஒற்றுமை கொள்கையை பின்பற்றியும், சத்ரபதி சிவாஜி அவர்களின் இந்து பாதுகாப்பு கொள்கையை பின்பற்றியும் முன்னடை போடுகிறது அமைப்பின் சிறப்பு நமது அமைப்பில் இருக்கக்கூடிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் ஒரே சீருடை உள்ளது . நமது அமைப்பில் மாவட்டத்திற்கு ஒருவர் என தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 38 நபர்கள் இந்து மதத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்துசட்டரீதியாக போராட டிராபிக் ராமசாமி ஐயா அவர்களைப் போல உருவாக்கப்பட்டுள்ளது தமிழகத்தை தலைமையாகக் கொண்டு அமையப் பெற்றுள்ள நமது அமைப்பு கர்நாடகத்திலும் கேரளாவிலும் ஆந்திராவிலும் கால் ஊன்றி உள்ளது ,அதிலும் மிகச் சிறப்பாக பாண்டிச்சேரியிலும் கர்நாடகத்திலும் செயல்பட்டு வருகிறது .
MMji@முரளி மோகன் குருஜி நிறுவனத் தலைவர்
நமது அமைப்பின் நிறுவன தலைவரின் இயற்பெயர் முரளி மோகன் என்பதாகும் அவர்களுடைய ஆன்மீக சிந்தனையாளும் போதனைகளாலும் அவர் குருஜி என்று அழைக்கப்பட்டார், தனது 13 வருட இந்துத்துவா கொள்கைக்காகவும் இந்து மதத்திற்காக பல போராட்டங்களில் ஈடுபட்டதற்காகவும் அவர்களை பின்தொடர்கின்ற இளைஞர்கள் அவர்களுக்கு எம் எம் ஜி என்ற பெயர் சூட்டினார் தற்போது அவர் அனைவராலும் எம் எம் ஜி @ முரளி மோகன் குருஜி என்று அழைக்கப்படுகிறார் இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவர், சிறு வயது முதலே இவர் உழைத்த உழைப்பின் பலனாக இவர் ஓசூர் மாநகரத்தில் பெரும் தொழிலதிபராகவும் முக்கிய நபராகவும் வாழ்ந்து வருகிறார், இவருடைய இந்துத்துவ கொள்கையும் அதன் மீது அவர் மேற்கொண்ட போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் புதிய புதிய சிந்தனைகளை குறித்து தெளிவாக பேச இந்த இடம் போதாது என்றே சொல்லலாம், சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்காக நாடு முழுவதும் ராம ரத யாத்திரை நடைபெற்றது அந்த ரத யாத்திரை ஆனது ஓசூர் மாநகரத்திற்கு வந்த பொழுது எத்தனையோ பெரும் பெரும் கட்சிகளில் பெரும் பெரும் நபர்கள் எல்லாம் இருக்கும்பொழுது அந்த ரத யாத்திரை குழுவினர் நம்பி வந்ததை இவரைத்தான் இவருக்கு சொந்தமான மண்டபத்தில் தான் ஏழு நாட்கள் தங்கி இருந்தது ரதம், அது மட்டுமல்லாமல் இவருடைய செயல்பாட்டுக்கு எதிராகவும் இவருக்கு கொலை மிரட்டல்கள் விடுத்தும் பல நாடுகளிலிருந்து அழைப்புகளும் நேரடி தாக்குதல் முயற்சிகளும் நடைபெற்றிருக்கின்ற காரணத்தினால் இவருக்கு அரசாங்கம் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது, இவர் இந்த அமைப்பை நிறுவுவதற்காக ஆர் எஸ் எஸ் பிஜேபி உள்ளிட்ட முன்னணி இந்து அமைப்புகளில் இருக்கக்கூடிய மூத்த தலைவர்களை சந்தித்து பலமுறை ஆலோசனை பெற்ற பிறகு ஹிந்து ஜனசேனா என்ற இந்த அமைப்பை நிறுவியுள்ளார், நமது பாரத தேசம் முழுவதும் இந்துக்கள் ஒற்றுமை ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தற்போது செயல்படும் வருகிறார். இவர் ஆன்மீகத்தில் ஈடுபட்டு அதனை ஆராய்ந்து தமிழ் கலைகளான ஆயக்கலை 64 ல் 20 கலைகளை கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது ,இதற்காக பாராட்டி பல பல்கலைக்கழகங்கள் தானாக முன்வந்து பல பட்டங்களை வழங்கி உள்ளது. இவரின் ஆன்மீக ஆராய்ச்சி விரிவுரையை கேட்டு உலகம் முழுவதும் இவர்களுக்கான சிஷ்யர்கள் 2000க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்

ஹிந்து ஜனசேனாவின் ஓசூர் மாநகர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது

" இந்து ஜன சேனா " என்ற பெயரில் புதியதோர் இந்து அமைப்பு இன்று துவங்கப்பட்டது.

இந்து ஜனசேனாவின் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (7/1/2024)நடைபெற்றது.
முக்கிய நிர்வாகிகள்
